Tuesday, May 22, 2012

வாழைப்பூ கட்லெட்...

தேவையான பொருட்கள் :
========================
வாழைப்பூ - ஒன்று
கடலை மாவு - இருநூறு கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - சிறிதளவு 
சோள மாவு - சிறிதளவு 
எண்ணெய் - பொரிபதர்க்கு

செய்முறை:
============
வாழை பூவை தனி தனியாக எடுத்து, அதை ஆய்ந்து விட்டு
அதை நன்றாக பொடியாக நறுக்க வேண்டும்.
பின்னர் கடாய்- ஐ அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி
அதில் வாழைப்போவை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வாழை பூ வெந்த உடன் அதில் சிறிதளவு கடலை மாவு கரைசலை சேர்க்க வேண்டும்.
அது இறுகிய உடன் அதை ஒரு தட்டில் போட்டு வில்லைகளாக நறுக்க வேண்டும்.
அந்த வில்லைகளை ஒன்றொன்றாக சோள மாவில் தடவி என்னில் பொரித்தெடுக்க
சுவையான வாழைப்பூ கட்லெட் ரெடி... :-)


Saturday, April 7, 2012

காரட் அல்வா...

தேவையான பொருட்கள்:
===========================
காரட் - 5
நெய் - சிறிதளவு
முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் - 2
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 15மே. கரண்டி

செய்முறை:
============
காரட்-ஐ துருவி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

கடாய்- ஐ அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி சூடு செய்ய வேண்டும்.

நெய் இளகியதும் துருவி வைத்த காரட் ஐ அதில் சேர்த்து காரட் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் காரட் முங்கும் அளவிற்கு மட்டும் பால் ஊற்றி அத்துடன் ஏலக்காய்-ஐ பொடித்து சேர்க்க வேண்டும்.

அடுப்பு மிகவும் சிறியதாக எரியுமாறு பார்த்து கொள்ளவும். பின்னர் அத்துடன் முந்திரி, உலர் திராட்சை சேர்க்க வேண்டும்.

பால் நன்கு சுண்டும் அளவிருக்கு களரி எடுக்க சுவையான காரட் அல்வா ரெடி... :-)

Sunday, March 25, 2012

பாசிபருப்பு மசாலா...

தேவையான பொருட்கள்:
=============================
பாசிபருப்பு - 1 கப்
உருளைகிழங்கு - 2 பொடியாக நறுக்கியது
பெரியவெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 1 (பாதியாக கீறியது)
தக்காளி - 1 (நான்காக நறுக்கியது)
கடுகு, எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
==============
உருளைகிழங்கு, பாசிபருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை நன்கு வேக வைத்து விட்டு,
பின்னர் தாளித்து விட்டு, அதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க
சாபத்தி -க்கு தொட்டு கொள்ளலாம்... ;-)

Saturday, March 17, 2012

கோதுமை (சம்பா) ரவை உப்மா...

தேவையான பொருட்கள்:
==========================

எண்ணெய் - 1 மே. கரண்டி
காரட் - 1 பொடியாக நறுக்கியது
பீன்ஸ் - 2 பொடியாக நறுக்கியது
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
தக்காளி - 1
கோதுமை ரவை - 100 கி
உப்பு - தே அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கடலை பருப்பு - தாளிக்க
மிளகாய் - 1 (கீறியது)
இஞ்சி - சிறிதளவு


செய்முறை :
============

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்த பின்பு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்க்கலாம். பின்பு கடலை பருப்பு சேர்த்து பொன் நிறமாகும் வரை வருக்க வேண்டும்.
பின்னர் காரட், தக்காளி, பீன்ஸ், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் கோதுமை ரவைஐ அதனுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு பின்னர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அடிபிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்...
கோதுமை ரவை நன்கு வேந்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு இறக்க சுவை நன்றாக இருக்கும்...