Tuesday, May 22, 2012

வாழைப்பூ கட்லெட்...

தேவையான பொருட்கள் :
========================
வாழைப்பூ - ஒன்று
கடலை மாவு - இருநூறு கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - சிறிதளவு 
சோள மாவு - சிறிதளவு 
எண்ணெய் - பொரிபதர்க்கு

செய்முறை:
============
வாழை பூவை தனி தனியாக எடுத்து, அதை ஆய்ந்து விட்டு
அதை நன்றாக பொடியாக நறுக்க வேண்டும்.
பின்னர் கடாய்- ஐ அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி
அதில் வாழைப்போவை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வாழை பூ வெந்த உடன் அதில் சிறிதளவு கடலை மாவு கரைசலை சேர்க்க வேண்டும்.
அது இறுகிய உடன் அதை ஒரு தட்டில் போட்டு வில்லைகளாக நறுக்க வேண்டும்.
அந்த வில்லைகளை ஒன்றொன்றாக சோள மாவில் தடவி என்னில் பொரித்தெடுக்க
சுவையான வாழைப்பூ கட்லெட் ரெடி... :-)


No comments:

Post a Comment