Sunday, March 25, 2012

பாசிபருப்பு மசாலா...

தேவையான பொருட்கள்:
=============================
பாசிபருப்பு - 1 கப்
உருளைகிழங்கு - 2 பொடியாக நறுக்கியது
பெரியவெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 1 (பாதியாக கீறியது)
தக்காளி - 1 (நான்காக நறுக்கியது)
கடுகு, எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
==============
உருளைகிழங்கு, பாசிபருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை நன்கு வேக வைத்து விட்டு,
பின்னர் தாளித்து விட்டு, அதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க
சாபத்தி -க்கு தொட்டு கொள்ளலாம்... ;-)

Saturday, March 17, 2012

கோதுமை (சம்பா) ரவை உப்மா...

தேவையான பொருட்கள்:
==========================

எண்ணெய் - 1 மே. கரண்டி
காரட் - 1 பொடியாக நறுக்கியது
பீன்ஸ் - 2 பொடியாக நறுக்கியது
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
தக்காளி - 1
கோதுமை ரவை - 100 கி
உப்பு - தே அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கடலை பருப்பு - தாளிக்க
மிளகாய் - 1 (கீறியது)
இஞ்சி - சிறிதளவு


செய்முறை :
============

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்த பின்பு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்க்கலாம். பின்பு கடலை பருப்பு சேர்த்து பொன் நிறமாகும் வரை வருக்க வேண்டும்.
பின்னர் காரட், தக்காளி, பீன்ஸ், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் கோதுமை ரவைஐ அதனுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு பின்னர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அடிபிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்...
கோதுமை ரவை நன்கு வேந்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு இறக்க சுவை நன்றாக இருக்கும்...