தேவையான பொருட்கள்:
==========================
எண்ணெய் - 1 மே. கரண்டி
காரட் - 1 பொடியாக நறுக்கியது
பீன்ஸ் - 2 பொடியாக நறுக்கியது
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - தாளிக்க
தக்காளி - 1
கோதுமை ரவை - 100 கி
உப்பு - தே அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கடலை பருப்பு - தாளிக்க
மிளகாய் - 1 (கீறியது)
இஞ்சி - சிறிதளவு
செய்முறை :
============
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்த பின்பு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்க்கலாம். பின்பு கடலை பருப்பு சேர்த்து பொன் நிறமாகும் வரை வருக்க வேண்டும்.
பின்னர் காரட், தக்காளி, பீன்ஸ், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் கோதுமை ரவைஐ அதனுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு பின்னர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அடிபிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்...
கோதுமை ரவை நன்கு வேந்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு இறக்க சுவை நன்றாக இருக்கும்...
No comments:
Post a Comment